ப்ரீத்தி ஜிந்தா இப்படி கூட பண்ணுவீங்களா

  • 6 years ago
ஐபிஎல் போட்டிக்கான இரண்டாம் நாள் ஏலம் இன்று நடக்கிறது. இதில் அனைவரையும் விட ப்ரீத்தி ஜிந்தா மிகவும் துடிப்பாக இருந்தார். தமிழ்ப்படங்களில் வரும் வில்லி கேரக்டர் போல அனைத்து அணிகளையும் இவர் தனியாக வைத்து செய்து கொண்டு இருந்தார். முக்கியமாக சென்னை அணியையும், மும்பை அணியையும் ஆட்டிப்படைத்தார். இவரை குறித்து சமூக வலைத்தளங்களில் பலவாறு கருத்து வெளிவருகிறது. தனி பெண்ணாக அவர் கட்டிய கெத்து கிரிக்கெட் ரசிகர்கள் கண்ணுக்குள்ளயே நிற்கிறது. பள்ளியில் எப்படி படிக்க கூடிய பிள்ளைகள் அனைத்திற்கும் கை தூக்குவார்களோ அதேபோல் ப்ரீத்தி ஜிந்தா அனைத்திற்கும் கை தூக்கினார். வீரரை எடுக்கிறோமோ இல்லையோ கையை தூக்கி வைப்போம் என்று எல்லோரையும் கேட்டார்கள். பல அணிகளுக்கு இது தொல்லையாக இருந்தது. இன்னும் இவரின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் 21.90 கோடி பணம் இருக்கிறது. பல முக்கியமான வீரர்களை ஏற்கனவே இவர் எடுத்துவிட்டார். இன்னும் ஒரு ஆர்டிஎம் வேறு மீதம் இருக்கிறது. இதனால் கண்டிப்பாக இன்றும் இவர் கெத்து ஆட்டம் ஆடுவார்.

Recommended